பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளிலும், 18 ஆம் தேதி குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
