Home சினிமா செய்திகள் ‘ஜெயிலர் 2’ படத்தின் ஆக் ஷன் காட்சி ரீ-ஷூட்?

‘ஜெயிலர் 2’ படத்தின் ஆக் ஷன் காட்சி ரீ-ஷூட்?

0

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கும் இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சில ஆக் ஷன் காட்சிகள் ரீ ஷுட் செய்யப் படுவதாகக் கூறப்படுகிறது. இளம் பார்வையாளர்களை கவரும் வகையில் வித்தியாசமான முறையில் அக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இக்காட்சிகள் இதுவரை ரஜினி படங்களில் பார்க்காததாக இருக்கும் என்கிறார்கள். “சண்டைக் காட்சிகளில் முன் எப்போதையும் விட ரஜினிகாந்த் அதிக ரிஸ்க் எடுக்கிறார், தயாரிப்பாளர்கள் அவரது பாதுகாப்புக்கான முழு ஏற்பாட்டையும் செய்துள்ளனர்” என்று படக்குழு தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் மற்றும் ஷாருக்கான் பங்கேற்கும் ஆக் ஷன் காட்சி ஒன்று இருக்கிறது என்றும் படத்தில் அது முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version