கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு அன்னப்படைப்பு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இங்கு திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.