கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை பகுதியை சேர்ந்த ஜெபியா என்ற பெண், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் பலமுறை மனு கொடுத்த பின்பும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு கேட்டு தனது மாற்றுதிறனாளி மகனுடன் குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். வசதி படைத்தவர்களுக்கு வீடு கொடுப்பதாகவும் தனக்கு தரவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.