Home கன்னியாகுமரி செய்திகள் புகையிலை விற்பனை செய்த வியாபாரி குண்டாஸில் கைது

புகையிலை விற்பனை செய்த வியாபாரி குண்டாஸில் கைது

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்பவர்களை போலீசார்  கைது செய்து குண்டச்சட்டத்தில் சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் பளுகல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணுமாமூடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரில் வியாபாரி விஜயன் என்பவரை கைதுசெய்தனர்.

மேலும்  போலீசார், ஏராளமான குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்ததுடன் விஜயனை குழித்துறை சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே இது போன்ற பல புகார்கள் இருந்துள்ளது.  இந்த நிலையில் விஜயனை குண்டர்சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சுந்தரவதனம், ஆட்சியர் அழகுமீனாவிற்க்கு பரிந்துரை செய்தார்.

ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து விஜயனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் நேற்று (செப்.,12) அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version