கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 48), பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இருந்த மின்சார அடுப்பை சைமன்நகரை சேர்ந்த பாபு (37) என்பவர் கேட்டுள்ளார். ஆனால் பணம் இல்லாமல் அடுப்பை தரமுடியாது என்று ராஜன் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாபு மற்றும் கீழராமன்புதூரை சேர்ந்த வர்க்கீஸ் (67) ஆகிய 2 பேரும் சேர்ந்து ராஜனை தாக்கி அரிவாளால் வெட்டினர். இதில் காயம் அடைந்த ராஜன் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று (டிசம்பர் 11) பாபு மற்றும் வர்க்கீஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.














