வேலூரில் விதிகளை மீறி நடந்த தவெக கூட்டம் – காவல் துறை சொல்வது என்ன?

0
12

வேலூர் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, மனு அளித்த 4 நாட்களில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மேலும், விதிமுறை களை மீறி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக காவல் துறையினர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் தவெக சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிப்.22-ம் தேதிதான் போலீஸார் அனுமதி அளித்ததாக அக் கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரி வித்திருந்தார்.

மேலும், நிகழ்ச்சிக்காக 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து காட்டினாலும் நிராகரிக்கிறார்கள். பிறகு வேறு இடங்கள் பார்க்க வேண்டியுள்ளது என குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையில், நிர்மல் குமாரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து வேலூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தவெக சார்பில் மக்கள் சந்திப்பு கூட் டத்தை பிப்ரவரி 8-ம் தேதி நடத்த உள்ளதாகவும், அதில் தங்களது கட்சி தலைவர் மற்றும் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என கடந்த ஜன.28-ம் தேதி அனுமதி கோரி மனு அளித்தனர்.

இது தொடர்பாக ஜன.30-ம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்களை தவெகவிடம் கேள்விகளாக கேட்டிருந்தோம். தொடர்ந்து, பிப்.5-ம் தேதி, தவெக சார்பில் நிகழ்ச்சி தேதி தள்ளிப்போவதால் மாற்று தேதி தொடர்பாக மீண்டும் மனு அளிக்கிறோம் என்றனர்.

பின்னர், நிகழ்ச்சியை பிப்.23-ம் தேதி நடத்த உள்ள தாகவும், அதில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என பிப்.6-ம் தேதி மனு அளித்தனர். இதற்கான அடிப்படை தக வல்களை கேட்ட நிலையில் பிப்.18-ம் தேதி தவெக அளித்த மனுவில், நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேருக்கு பதிலாக 4,900 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அடிப்படை வசதிகள் தொடர்பான கேள்விகளை பிப்.19-ம் தேதி கேட்கப்பட்ட நிலையில் அதற் கான பதிலுரைகளை பிப்.20-ம் தேதி தவெகவினர் அளித்தனர். நிகழ்ச்சி நடத்த 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்தாலும் மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, கள ஆய்வு செய்து பிப்.22-ம் தேதி காவல் துறை சார்பில் அனுமதிக்கான ஆணை அளிக்கப்பட்டது. இதில், காலதாமதம் செய்யாமல் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், தவெக நிர்வாகிகள் காவல் துறையினரிடம் அனு மதி பெற கடந்த ஒன்றரை மாதங் களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரம் முன்னதாக அனுமதி அளித்ததாக கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

மேலும், பிப். 23-ம் தேதி நடை பெற்ற நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிட்டபடி 4,900 பேருக்கு மேலாக குறைந்தபட்சம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது தெரிய வருகிறது.

இது சென்னை உயர் நீமதின்ற அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்து வதற்கு அறிவுறுத்தியுள்ள விதி முறைகளை மீறி செயல்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here