நடிகர் விஜய் கட்சி மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியில் நாளை பந்தல் கால் நடும் விழா

0
271

விஜய் கட்சி மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா விக்கிரவாண்டியில் நாளை நடைபெறுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து, மாநாட்டு நடத்துவதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டுக்கு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எத்தனை பேரை அழைத்து வர வேண்டும், அவர்களுக்கான வசதிகள் குறித்து தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது, மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார். அந்தவகையில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 100 முதல் 150 உறுப்பினர்களை தேர்வு செய்து தன்னார்வலர்களாக இணைக்க வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் எனவே 10 ஆயிரம்பேர் மாநாட்டுக்காக தன்னார்வலர்களாக இணைவார்கள் என்றும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதேநேரம் மாநாட்டில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி இருக்கை வசதிகள், வாகன நிறுத்தும் வசதிகள், கழிப்பறை வசதிகள், உணவு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா அக்.4-ம்தேதி (நாளை) அதிகாலை 4 மணிமுதல் 6 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்தல் கால் நடும் விழா முடிந்ததும், மேடை அமைக்கும் பணிகள் தொடங்க இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here