கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் நேற்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து வந்து திடீரென பிரேக் டவுன் ஆனது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
குறுகிய பாலம் பகுதியில் அரசு பஸ் பிரேக் டவுன் ஆனதால் நாகர்கோவில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பல மணி நேரம் நெருக்கடிக்குள்ளானது. பின்னர் பேருந்து அங்கிருந்து மாற்றி விடப்பட்டது.














