கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் எட்டுக்கடை பஜார் பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது ராஜேஷ் என்பவர் அவரது பலசரக்குக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அதனை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.














