கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் பூபதி மகன் முபின் (24). கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரியை நுள்ளி விளை பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள்.
நேற்று (செப்.,11) சகோதரியை பார்ப்பதற்காக முபின் மற்றும் அவரது தம்பி உறவு முறையான 15 வயது சிறுவன் ஆகியோர் பைக்கில் வந்துள்ளனர். பின்னர் மாலையில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை முபின் ஓட்டினார்.
களியங்காடு – இறச்சகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே செல்லும்போது, எதிரே தாறுமாறாக வந்த கேரளா பதிவெண் கொண்ட கார் ஒன்று பைக் மீது மோதி தள்ளியது. இதில் சிறுவன் உட்பட இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது.
அக்கம்பக்கத்தினம் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.














