கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று இரவு கலெக்டர் அலுவலகம் சந்திப்புப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பெட்ரோல் நிரப்பிய பிறகு மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தபோது திடீரென தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
