குமரி மாவட்டத்தில் குமாரகோவில் மையமாக வைத்து சின்மய மிஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமத் பகவத் கீதா பாட்டும் பொருளும் ஒப்புவிக்கும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட போட்டி நவம்பர் 3-ம் தேதி நேற்று தக்கலை பார்த்தசாரதி கோயில் வளாக தனியார் மண்டபத்தில் நடந்தது.
கோயம்புத்தூர் சின்மய மிஷன் பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா , சுவாமி வேதா நிஷ்டானந்தா, நீலகண்டசைதன்யா, ஹரிஷ் , சிவா, வெள்ளிமலை. ஹிந்து தர்ம வித்தியா பீடம் சுவாமி சைதன்யானந்தஜி மஹாராஜ் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து ஸ்ரீமத் பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தது. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாநில அளவிலான ஶ்ரீமத் பகவத் கீதா ஒப்பு வித்தல் போட்டியானது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வைத்து வரும் ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.