ராஜாக்கமங்கலம்: மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி

0
216

ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ஸ்ரீதர் (13). இவர் ஈத்தாமொழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ( 1 -ம் தேதி  மாலை ஸ்ரீதர் வீட்டருகில்  உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது சாலையோரமாக லோடுடன் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீதரின் செருப்பு எதிர்பாராத விதமாக அந்த லாரியின் மீது விழுந்துள்ளது.

      உடனே ஸ்ரீதர் தனது செருப்பை எடுப்பதற்காக அந்த லாரி மீது எறினார். அப்போது மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் உரசியதில் ஸ்ரீதர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.   உடனே அக்கம் பக்கத்தினர் ஸ்ரீதரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவனே பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீதர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here