கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டமானது ஒன்றிய செயலாளர் பி கோபால் தலைமையில் கருங்கல் பாலூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் 2026 ம் ஆண்டு நடைபெற இருக்கிற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வெற்றி பெற செய்ய வேண்டும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் அறிவித்தது போல் இருநூறு தொகுதிகளை வெற்றி பெறும் வகையில் அனைவரும் கழக அரசின் சாதனைகளை இல்லம் தோறும் கொண்டு சேர்த்து வாக்குகள் சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கிள்ளியூர் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுத் தர வேண்டும் என்று தலைமையை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக அவைத்தலைவர் பாலூர் தேவா உட்பட கிளைக் செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.