கருங்கல்: விபத்தில் 2 பேர் பலி சிசிடிவி வெளியாகி பரபரப்பு

0
359

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சேம் ராஜ் மகன் ஜெகன் அதே பகுதியை சேர்ந்தவர் சின்ன நாடான் மகன் வினு. இருவரும் நண்பர்கள். இவர்கள் பைக்கில் கருங்கல் அருகேயுள்ள பாலூர் – தேங்கா பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பினு ஓட்டி சென்றார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் சாலையில் நிலை தடுமாறி கீழே கவிழ்ந்தது.
இதில்   எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் இருவர் மீதும் ஏறி இறங்கி அருகில் இருந்த சுவற்றில் மோதி நின்றது. இந்த விபத்தில் வினு , ஜெகன் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கருங்கல் போலீசார் இரு உடல்களையும் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டெம்போ டிரைவர் பள்ளியாடி பகுதியை சேர்ந்த தேவலிஜின்  என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனுடைய விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here