குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து குளச்சலில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் பூலவிளை பருதியில் மின்னல் தாக்கியதில் இன்ஜினியர் வில்பிரட்டு (56) என்பவர் கான்கிரீட் வீடு மாடி கூரையில் ஓட்டை விழுந்தது. இந்த ஓட்டை வழியாக மழை நீர் புகுந்தது. மேலும் வீட்டில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் நாசமானது.
மேலும் ஓட்டை விழுந்த மாடியில் ஜன்னல் திரையில் தீ பற்றி எரிந்தது. மேலும் அதே பகுதியில் பதினைந்து மேற்பட்ட வீடுகளில் மின்விசிறிகள் ஏசி, மின் மோட்டார் என மின்சாதன பொருட்கள் நாசம் அடைந்தன. அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே மின்னல் தாக்கியதில் டிரான்ஸ்பார்மர் நாசமானது. இதனால் அப்பகுதி முழுவதும் இரவில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இது போன்று மண்டைக்காடு கீழ்கரையிலும் ஒரு டான்ஸ்பார்மர் நாசமாகி உள்ளது.