திருவிதாங்கோடு: மகான் மாலிக் முகமது சாகிப் ஒலியுல்லாஹ் விழா

0
268

குமரி மாவட்டம் திருவிதாங்கோடு மகான் மாலிக் முஹம்மது சாகிப் ஒலியுல்லாஹ் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று (17-ம் தேதி)  இரவு தொடங்கியது. வருகிற 25-ம் தேதி வரை தினசரி இரவு மனிதர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பயான் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நேற்று மாலை அழகிய மண்டபம் புகாரி பள்ளிவாசலில் இருந்து மக்ரிப் தொழுகை முடிந்ததும், 6. 30 மணி அளவில் கொடி. ஊர்வலம் தொடங்கி திருவிதாங்கோடு மகான் மாலிக் முகமது சாகிப் ஒலியுல்லா பள்ளிவாசல் வந்து சேர்ந்தது.

பின்னர் பள்ளி வளாகத்தில் கொடியை ஏற்றி வைக்கப்பட்டு நேர்த்தி வழங்கப்பட்டது. வரும் 25ஆம் தேதி இரவு வரை  தினமும் மார்க்க அறிஞர்களின் இஸ்லாமிய அறநெறிகள், மார்க்க சட்டங்கள், நீதி போதனைகள், மகானின் வரலாறு ஆகிய குறித்து  சிறப்புரை நடக்கிறது.   நிகழ்ச்சியில் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் செயலாளர் முகமது யூசுப், தலைவர் அன்வர் உசேன், துணைத் தலைவர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here