மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் கனரக வாகனங்களுக்கு நிரந்தர தடை

0
428

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் நேற்று (17-ம் தேதி) விளவங்கோடு தொகுதியில் 24 மணி நேர ஆய்வு  பணிகள் ஈடுபட்டார். தொடர்ந்து மார்த்தாண்டம் பஸ் நிலையம், மார்த்தாண்டம் மேம்பாலம் போன்ற பகுதிகளை பார்வையிட்டார்.  அவருடன் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும் ஊழியர்கள கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: –  களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தற்போது தமிழக நெடுஞ்சாலை துறையிடம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை 14. 6 கோடி ரூபாய் செலவில் முழுமையாக தார் போட உள்ளது. மேம்பாலத்தின் பழுதடைந்த பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் கனரக  வாகனங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here