கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் நடை மேம்பாலம் வழியாக செல்வதை தவிர்த்து தண்டவாளத்தில் இறங்கி அடுத்த நடை மேடைக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. இது ஆபத்தானது என்பதால் அவர்கள் நடை மேம்பாலம் வழியாக நடந்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.