தேங்காபட்டணம்: மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் கரை ஒதுக்கம்

0
261

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இன்று குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது.   இதையடுத்து தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று (அக்.,17) படகுகள் கரையொதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் நேற்று (அக்.,16) அதிகாரிகளின் அறிவுரையை மீறி சிறு படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகம் முகத்துவாரத்தில் உள்ளே நுழைய முடியாமல் தவித்தனர்.இதையடுத்து  சிறு படகுகளிலும் இன்று (அக்.,17) மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here