குமரி: மகிஷாசுரமர்த்தினி கோயிலில் கொள்ளை முயற்சி

0
341

குமரி மாவட்டம் வால்வச்சகோஷ்டத்தில் மகிஷாசுரமர்த்தினி கோயில் அமைந்துள்ளது. மன்னர்கள் போருக்கு புறப்படுவதற்கு முன் இந்த கோவிலில் வாள் வைத்து வணங்கி செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் இந்த ஊருக்கு வாள்வச்சகோஷ்டம் என்ற பெயர் வந்ததாக கூறுகிறது.   இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட இந்த கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் ஏராளமானவர் வந்து செல்கிறார்கள்.

நேற்று (அக்.,15) காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் பிரகாரத்திற்கு உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது, நேற்று முன் தினம் நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்த வாலிபர் ஒருவர் பிரகாரத்திற்குள் நுழைந்து பூட்டை உடைக்க கையில் கம்பியுடன் வருவது மாதிரி காட்சி பதிவாகியுள்ளது.

ஆனால் அந்த கதவுக்கு மற்றொரு லாக்கர் உள்ளதால் உடைக்க முடியாத அவர் திரும்பி சொல்வதாக காட்சிகள் பதிவாகியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம் அந்த அவர் யார்?   என்பதை பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here