திருவட்டாறு: குருசடியில் காணிக்கை பெட்டி உடைப்பு

0
390

திருவட்டாறை அடுத்த முளவிளை பகுதியில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. அதன் அருகில் ஆலயத்துக்குட்பட்ட புனித அந்தோணியார் சிற்றாலயமும், குருசடியும்  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குருசடிக்கு வெளியே காணிக்கை பெட்டி உண்டு.  

இந்த நிலையில் நேற்று (அக்.,15) காலை  காணிக்கை பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் திருவட்டாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். காணிக்கை பெட்டியில் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த மற்றொரு கதை திறக்க முடியவில்லை.

இதனால் காணிக்கை பணம் தப்பியது. இருப்பினும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெட்டியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here