நாகர்கோவிலில் பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கியவர் மீது வழக்கு

0
281

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் நெல்சன் ஜாய். இவரது மனைவி உஷா (வயது 50). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த அடைக்கல ஆனந்த் (45) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உஷா நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குவைத்து அடைக்கல ஆனந்தை பார்த்த உஷா, கொடுத்த பணம் மற்றும் நகையை கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரத்தில் அடைக்கல ஆனந்த் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் உஷாவை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அடைக்கல ஆனந்த் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here