கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடையை சேர்ந்த ஷாஜு என்பவரின் 3 வயது சிறுவன் ஷாமல் யாத்ராவுக்கு அவரது பெற்றோர் விளையாடுவதற்காக பல்வேறு வகையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். நேற்று (அக்.,11) ஆயுத பூஜையை ஒட்டி விளையாட்டுப் பொருட்களை ஒரே இடத்தில் வைத்து சிறுவன் ஷாமல் யாத்ரா பூஜை செய்து தரையில் படுத்து வணங்கி ஆயுத பூஜையை கொண்டாடியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.