கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் ஏராளமான ஆட்டோக்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இரவு நேரங்களிலும் அங்கு ஆட்டோக்கள் நிற்கும். நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் சுமார் 10 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. நேற்று காலையில் ஆட்டோ டிரைவர்கள் அங்கு வந்தபோது, 8 ஆட்டோக்களை மர்மநபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இதில் 2 ஆட்டோக்களின் கண்ணாடி உடைந்திருந்தது. மேலும் சில பொருட்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.