துபாய்: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை, தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக் கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக ஸ்டெ பானி டெய்லர் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 10, கியானா ஜோசப் 4, டியான்ட்ரா தோட் டின் 13, விக்கெட் கீப்பர் கேம்பெல் 17, ஆலியா அலைன் 7 ரன்கள் எடுத்தனர். ஜைஜா ஜேம்ஸ் 13 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார்.