அபிமன்யு ஈஸ்வரன் சதம் விளாசல்

0
296

லக்னோ: இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வரன்.

லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 286 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 222 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் அஜிங்க்ய ரஹானே 97 ரன்கள் சேர்த்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து பேட் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 74 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 212 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 151 ரன்களும், துருவ் ஜூரெல் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 9, சாய் சுதர்சன் 32, தேவ்தத் படிக்கல் 16, இஷான் கிஷன் 38 ரன்களில் ஆட்டமிழந்தனர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 248 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here