கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி

0
392

கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை மற்றும் கடமலைக்குன்று வட்டார பேரவை இணைந்து நடத்திய போதை விழிப்புணவு பேரணி பிலாங்காலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலத்திலிருந்து துவங்கி பூந்தோப்பு சி. எஸ். ஐ ஆலயம் வரை நடைபெற்றது.   பேரணிக்கு பேரவை தலைவர். மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார்.

இந்த பேரணியை கன்னியாகுமரி சி எஸ் ஐ பேராயர் A. R. செல்லையா கொடி அசைத்து துவங்கி வைத்தார். காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார். தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் துவக்க உரையாற்றினார். அதை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் 20 வட்டார பிரதிநிதிகள், மாவட்ட பேரவை, வட்டார பேரவை நிர்வாகிகள், போதகர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here