கோவை ஈஷா மையத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை

0
275

கோயம்புத்தூர் வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “ஈஷா யோகாமையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது 2 மகள்களை மீட்டுத்தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இதையடுத்து, ஈஷா யோகா மையம் மீதுள்ள நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோவை மாவட்ட காவல் மற்றும் சமூகநலத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஈஷா மையத்தில் விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாகநேற்றும் விசாரணை நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலா அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய விசாரணை, இரவு வரை நீடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here