பாஜகவை கண்டித்து சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம்: காங்கிரஸார் பங்கேற்பு

0
267

 ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜகவைக் கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ்., பாஜகவை கண்டிக்கும் வகையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணாசாலை ஜிம்கானா கிளப் முகப்பிலுள்ள காமராஜர் சிலையிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகள் சிலை வரை நேற்று நடைபயணம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராகவன்முறை மற்றும் விஷமத்தனமான பேச்சுகளைத் தொடர்ந்தால் பாஜகவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை தமிழகத்தில் இருந்து தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here