குமரி அறிவியல் பேரவை, ஆற்றூர் என் வி கே எஸ் கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய உலக அகிம்சை தினம், காந்தி பிறந்தநாள் மற்றும் காந்தி சேவை விருது வழங்கும் விழா போன்றவை கல்லூரி அரங்கில் நேற்று (2 -ம் தேதி) நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ராமச்சந்திரன் நாயர் தொடங்கி வைத்தார். காலையில் காந்திய சிந்தனையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அம்சங்கள் என்ற பொருளில் கலந்தாய்வு நடைபெற்றது. மாலையில்
குமரி அறிவியல் பேரவை சார்பில் மூன்று பேருக்கு காந்தியசேவை விருது வழங்கப்பட்டது.
நடமாடும் நூலகம் பேராசிரியர் இரா. தியாகசுவாமி நினைவு காந்திய சேவை விருது மொழித் தொண்டுக்காக பைங்குளம் சிகாமணி என்பவருக்கும், கல்வித் தொண்டுக்காக முகிலை இராஜபாண்டியன், சமூகத் தொண்டுக்காக டாக்டர் குமாரதாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்திய மருத்துவசங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் டாக்டர் விஜயகுமார் வழங்கினார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தார்.