குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு

0
259

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இந்திரா நகர் பகுதியில் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று (30-ம் தேதி)  நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் இரணியல் கோணம் இந்திரா நகர் பகுதியில் கடந்த நூற்றாண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக சிலரது தூண்டுதலின் பேரில் எங்களது வாழிடத்தை விட்டு அகற்ற முயல்கின்றனர்.

எங்களது குடியிருப்புகளை அகற்றினால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.   எங்களுக்கு வேறு நிலங்கள் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாங்கள் வசிக்கின்ற குடியிருப்பு பகுதியில் வாழ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here