நெடுஞ்சாலைத்துறையை  கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

0
325

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை திருவனந்தபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலும் செல்கிறது. இதில் நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை முதல் கணபதியான்கடவு ஆற்றுப்பாலம் வரையில் சாலை மிகவும் அகலம் குறைவாக காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே சாகலையை அகலப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கிளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் சட்டமன்றத்தில் வலியுறுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசு சம்பந்தப்பட்ட பகுதியில் சாலை இரு புறமும் நில ஆர்ஜிதம் செய்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க ரூபாய் 2 கோடி 70 லட்சம் அனுமதித்தது.

வருவாய்த் துறையினர் நில ஆர்ஜிதம் செய்த பிறகும்  நெடுஞ்சாலைத் துறையினர் நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதை கண்டித்து நேற்று (செப்.,27) மாலை விரிவிளை  சந்திப்பில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி, மற்றும் தேமுதிக உட்பட அனைத்து கட்சியினை சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here