தகாத வார்த்தை பேசி வக்கீலை அரிவாளால் வெட்டிய இளைஞர்

0
199

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடுகன்பற்றை கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). தற்போது இவர் நாகர்கோவில் நேசமணிநகர் ஹென்றி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார்.

சம்பவத்தன்று நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவர் சீனிவாசனுக்கு போன் செய்து தனது மகன் சுஜின் (32) தகராறு செய்து அடிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த வீட்டுக்கு சென்ற சீனிவாசனை, சுஜின் தகாத வார்த்தைகளால் பேசி தலை, கையில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சீனிவாசன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் நேசமணி நகர் போலீசார் சுஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here