குளச்சல் தொகுதியை திமுகவுக்கு  ஒதுக்க தீர்மானம்..!

0
208

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (செப்.,26) மண்டைக்காடு, பருத்திவிளையில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஎஸ்பி சந்திரா தலைமை வகித்தார்.  

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில், தமிழ்நாடு வளர்ச்சிக்காக அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்று  பல ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை பெற்று தந்த முதலமைச்சருக்கு இக்கூட்டத்தில் பாராட்டுகளும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. ‌ 

கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு குளச்சல் சட்டமன்ற தொகுதியில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தொகுதியை திமுகவிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசி சுபாசிங் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here