ஆந்திர அரசுக்கு மத்திய அரசின் முழு ஆதரவு உள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு

0
389

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதிலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதிலும் மத்திய அரசின் முழு ஆதரவு உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கான அரசாங்கங்கள் உள்ளன. இவை மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் கூடிய முடிவுகளை எடுக்கும் அரசாங்கங்கள்.

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது. இதன் காரணமாக அரசு எடுக்கும் முடிவுகள் விரைவாக செயல்படுத்தப்படுகின்றன.

100 நாட்களில் 100க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய நல்லாட்சி இது. கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்கும், அடக்குமுறைக் கொள்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மக்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை மீண்டும் கொண்டு வந்த அரசாங்கம் இதுவாகும். அதனால் தான் நல்லாட்சி அரசு” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here