கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பகுதி கோழிவிளை இலங்கைவாழ் தமிழர் மறுவாழ்வு முகாமினை குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று (செப்.,13) பார்வையிட்டார்.
இம்முகாமில் 108 குடும்பங்களை சார்ந்த 333 நபர்கள் வசித்து வருகின்றனர். இம்முகாமில் வசிக்கும் 10 குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர்களுக்கு தனித்தனியே ஒரு கழிப்பிடம் வீதம் 50 குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கு தனித்தனியாக ஐந்தைந்து கழிப்பிடங்கள் வீதம் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் இக்கழிப்பிடங்களுக்கு செல்ல வசதியாக மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கவும், மின் பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை உடனடியாக அகற்றவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இலங்கை வாழ் தமிழர்கள் தங்களுக்கு தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்ட வீடுகளை கட்டி தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அரசின் அனைத்து சலுகைகளும் வழங்குவதாக கலெக்டர் உறுதியளித்தார்.