கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன், தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வசந்தம் நகர் பகுதியில் உள்ள மதுபார் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் மேல பெருவிளை பகுதியை சேர்ந்த கார் டிரைவரான செல்வன் ஜெபராஜ் (வயது 29) வந்தார்.
அவர் ரவீந்திரனிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த செல்வன் ஜெபராஜ் அங்கிருந்த பீர்பாட்டிலை எடுத்து ரவீந்திரனை தாக்கினார். இதில் காயமடைந்த ரவீந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் செல்வன் ஜெபராஜை ஆசாரிபள்ளம் போலீசார் கைது செய்தனர்.