கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளவிளை சர்ச் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 50), தொழிலாளி. இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாகவசித்துவருகிறார். நேற்று முன்தினம் (செப்.,10) இரவு மணிகண்டன் உழவர்கோணம் பகுதியில் உள்ள ஒரு குவாரியில் பழைய இரும்பு பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி அங்கிருந்த 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.














