மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐடிஐ மாணவர் உயிரிழப்பு

0
284

கருங்கல் அருகே உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலையில் அஜித் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கருமாவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டு இழந்து சாலையோரத்தில் இருந்த காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் அஜித் உட்பட இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.  தகவலின் பேரில் கருங்கல் போலீசார் படுகாயம் அடைந்த இரண்டு பேரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.4) அஜித் உயிரிழந்தார். அவர் நண்பருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருங்கல் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here