இசையமைப்பாளர் அனிருத் தனது திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவற்றைப் பகிர்ந்து, ‘எனக்கு பிடித்த மாயாஜாலம்’ எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் பகிர்ந்துள்ள படங்களில் கொஞ்சும் காதல், கொஞ்சம் இசை, கல்யாண கலை மின்னுகின்றன. இந்த உணர்வுகளை முதல் படம் பூரணமாக வெளிப்படுத்துகிறது.
இரண்டாவது படத்தில் கைகோத்தபடி திருமண ஜோடி ஒய்யாரமாக நடந்து வர, இருபுறமும் இருப்பவர்கள் அவர்களை ஆராவாரத்துடன் வரவேற்கிறார்கள்.
மூன்றாவது படத்தில் இயல்பாக இசை தன்னை ஒரு அங்கமாக்கி இருக்கிறது. மின்விளக்குகள் நட்சத்திரங்களாய் ஜொலிக்க, பட்டொளி வீசும் மேடையில் அனிருத் பாடும் பாடலுடன் உடல்மொழியால் இணைந்து கொள்கிறார் காவ்யா.












