முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மேலும் 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு

0
34

முரசு புயலில் சிக்கி உயி​ரிழந்த மேலும் 2 மீனவர்​களின் உடல்​கள் நேற்று முன்​தினம் மீட்​கப்​பட்​டன. சென்னை காசிமேடு மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து கடந்த அக். 29-ம் தேதி, செல்​வழகன் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகில், படகு ஓட்​டுநர் சூர்யா உள்​ளிட்ட 9 மீனவர்​கள் ஆழ்​கடலில் மீன்​பிடிக்​கச் சென்​றனர்.

ஆந்​திர மாநிலம் நிஜாம்​பட்​டினம் அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, புயல் எச்​சரிக்கை காரண​மாகப் பாது​காப்பு கருதி நிஜாம்​பட்​டினம் துறை​முகத்​தில் விசைப்​படகை நிறுத்​தி​யுள்​ளனர். பிறகு மீண்​டும் கடலுக்​குள் மீன்​பிடிக்​கச் சென்​ற​போது, நடுக்​கடலில் விசைப்​படகின் இன்​ஜின் பழுதடைந்​துள்​ளது.

இதுகுறித்​து, அரு​கில் இருந்த மற்​றொரு விசைப்​படகுக்கு கடந்த 3-ம் தேதி அதி​காலை 3.30 மணி அளவில் வயர்​லெஸ் மூலம் தகவல் தெரி​வித்​துள்​ளனர். அதன்​பிறகு, அந்த 9 மீனவர்​களை​யும் தொடர்​பு​கொள்ள முடிய​வில்​லை.

இதனிடையே, ஆந்​திர மாநிலம் ஓங்​கோல் அருகே 7 மீனவர்​களின் உடல்​கள் அடுத்​தடுத்து கரை ஒதுங்​கின. இவை மீட்​கப்​பட்​டு, மாய​மான தமிழக மீனவர்​களின் உடல்​கள் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, மோகன், சூர்​யா, முரு​கன், விஜய​காந்த், குப்​பு​சாமி, குப்​பன், அரவிந்த் ஆகிய 7 பேரின் உடல்​களும் அடை​யாளம் காணப்​பட்​டு, அவர்​களின் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

இருப்​பினும், எஞ்​சிய இரண்டு மீனவர்​களின் நிலை குறித்து எந்​தத் தகவலும் கிடைக்​காத​தால், அவர்​களைத் தேடும் பணியை கடலோரக் காவல் படை​யினர் தீவிரப்​படுத்​தினர். இந்​நிலை​யில், ஆந்​திர மாநிலம் கொத்​தப்​பட்​டினம் அருகே உள்ள லட்​சுமிபுரம் கடற்​கரை​யில் மேலும் 2 மீனவர்​களின் உடல்​கள் கரை ஒதுங்​கின.

இதையடுத்​து, அந்த உடல்​களை மீட்ட அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், அவை மாய​மான மீனவர்​களான ராஜேஷ், நாராயணன் ஆகியோ​ருடையவை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

தொடர்ந்​து, இரு​வரின் உடல்​களும் உடற்​கூறாய்​வுக்கு பிறகு ஆம்​புலன்ஸ் மூலம் சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டு, அவர்​களின் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. சென்னை காசிமேட்​டில் இருந்து மீன்​பிடிக்​கச் சென்று ஆந்​திர கடல் பகு​தி​யில் மாய​மான 9 மீனவர்​களும் தற்​போது சடலங்​களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here