கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறாம்விளை பகுதியில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.














