இரணியல் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் – எம் பி பங்கேற்பு

0
350

இரனியல் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ஜல்லி யார்டு அமைத்து வருகிறது. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வழி தடத்தை மறைத்து வீடுகளை இடித்து நடைமேடை அருகே அதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இதனால் திங்கள்நகர், நெய்யூர் மற்றும் இரணியல், இரணியல் கோணம் போன்ற பகுதிகளில் இருந்து ரயில் நிலையம் வழியாக அழகிய மண்டபம் – திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

       இது தொடர்பாக ரயில்வே நிறுவனத்திற்கு புகார் தெரிவித்தும் ஜல்லி யார்டு அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் கைவிடவில்லை. இந்த நிலையில் இதை வேறு இடத்தில் மாற்ற கோரி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இரணியல் ரயில் நிலையத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விஜய் வசந்த் எம் பி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே டி உதயம், பிரின்ஸ் எம் எல் ஏ உட்பட பலர்  கலந்து கொண்டு பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here