“காங்கிரஸ் என்னும் ஒட்டுண்ணியால் காணாமல் போகும் இயக்கங்களின் குரல்…” – பிரதமர் மோடி விமர்சனம்

0
26

‘அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை கொண்டுவர விரும்பும் இயக்கங்கள் சில உள்ளன. ஜனநாயகத்தில் இத்தகைய இயக்கங்கள் அவசியமானவை. சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது அதன் நோக்கம். ஆனால், காங்கிரஸ் என்னும் ஒட்டுண்ணியால் அந்த இயக்கங்களின் குரல் காணாமல் போகிறது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி எதிர்க்​கட்​சிகள் நாடு முழுவதும் பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. தலைநகர் டெல்லியில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிஜேபி முதலான அமைப்புகள் ஈடுபட்டன. இந்தச் சூழலில் பிரதமர் மோடியின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.

தனியார் செய்தி நிறுவன மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் “காங்கிரஸ் கட்சி ஒட்டுண்ணியாக மாறிவிட்டது. அது அடுத்தவர்கள் முன்னேறுவதை அறவே விரும்புவதில்லை. காங்கிரஸ் கட்சி சுயமாக சிந்திக்கும் திறனை இழந்துள்ளது. ‘திமாகி நக்சல்கள்’ அதன் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளனர்.

எதிர்க்கட்சி தரப்பில் திறமையான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்கவும், அரசாங்கத்தை விமர்சிக்கவும் விரும்புகிறார்கள் என்பதை நாம் நாடாளுமன்றத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தையே செயல்பட விடுவதில்லை.

மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், ஒரே ஒரு நபரை மட்டும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் இப்படி செயல்படுகிறது. அந்த நபரும் வெளிநாடுகளில் சென்று தேசத்தை அவமதிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுகிறார். நமது தேசிய விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என அவர்களிடம் முறையிடவும் செய்கின்றனர்.

அந்த ஒரு நபரை காங்கிரஸ் கட்சி முன்னிலைப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை கொண்டு வர விரும்பும் இயக்கங்கள் சில உள்ளன. ஜனநாயகத்தில் இத்தகைய இயக்கங்கள் அவசியமானவை. சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது அதன் நோக்கம். ஆனால், காங்கிரஸ் என்னும் ஒட்டுண்ணியால் அந்த இயக்கங்களின் குரல் காணாமல் போகிறது.

காங்கிரஸ் கட்சி அதன் அழிவை தானாகவே தேடிக்கொள்ளட்டும். ஆனால், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள, காங்கிரஸ் கட்சி இப்போது இந்தியாவின் சாதனைகளையும், முன்னேற்றத்தையுமே கேள்விக்குள்ளாக்குகிறது.

உண்மையில் அந்தக் குடும்பம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சுமையாகவே மாறியுள்ளது. அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் இது நன்றாகத் தெரியும். இதைப் பற்றி எங்களிடமே அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அதை பொறுத்துக்கொண்டு அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here