சாலை விபத்துகளை தடுக்க அனைத்து கார்களிலும் தானியங்கி பிரேக் – 2030 முதல் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு

0
26

சாலை விபத்துகளை தடுக்க அனைத்து கார்​களி​லும் தானியங்கி பிரேக் அமைப்பை 2030 முதல் கட்​டாய​மாக்க மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது.

நாடு முழு​வதும் சாலை விபத்​துக்​களை குறைக்​க மத்​திய அரசு பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அதன் ஒரு பகுதியாக கார்​களில் மேம்​பட்ட ஓட்​டுநர் உதவி அமைப்​பு​களின் (ஏடிஏஎஸ்) சில பாது​காப்பு அம்​சங்​களை கட்​டாய​மாக்க அரசு முடிவு செய்​துள்​ளது.

அதன்​படி, 2030 அக்​டோபர் முதல், அனைத்து புதிய கார் மாடல்​களி​லும் மேம்​பட்ட அவசர​கால பிரேக்​கிங் சிஸ்டம் (ஏஇபிஎஸ்) பொருத்​து​வதை கட்​டாய​மாக்க மத்​திய அரசு முடிவு செய்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

2030-க்கு முந்​தைய, தற்​போது உற்​பத்​தி​யில் உள்ள மாடல்​களுக்​கு, 2032 அக்​டோபர் முதல் ஏஇபிஎஸ் கட்​டாய​மாக்​கப்​படும். ஏடிஏஎஸ் பாது​காப்பு அம்​சங்​களின் காலக்​கெடு அடங்​கிய வரைவு அறிவிப்பு விரை​வில் வெளி​யாகும்.

பாது​காப்பு அம்​சங்​களில் வர்த்தக வாக​னங்​களுக்கு முக்கியத்துவம் அளிக்​கப்​படும் என கூறப்​படு​கிறது. அதன்​படி, மறைவுப் பகுதி தகவல், ஓட்​டுநரின் தூக்​கக் கலக்​கத்​தைக் கண்டறிந்து எச்​சரிக்​கும் அமைப்பு மற்​றும் பாதை வில​கல் எச்சரிக்கை அமைப்​பு​களும் கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளன.

ஏடிஏஎஸ், ஏஇபிஎஸ் என்​றால் என்ன?

ஏடிஏஎஸ் என்​பது 100-க்​கும் மேற்​பட்ட மின்​னணு தொழில்​நுட்​பங்களின் ஒரு தொகுப்​பாகும். இது ஏற்​படக்​கூடிய அபாயங்களைக் கண்​டறிந்​து, ஓட்​டுநரை எச்​சரித்​து, சில சமயங்களில் மோதலைத் தடுப்​ப​தற்​காக பிரேக்​கு​கள் அல்​லது ஸ்டீயரிங்​கைத் தானாகவே கட்​டுப்​படுத்​து​வதன் மூலம் பாது​காப்பை அதி​கரிக்​கிறது. தற்​போது, சில கார்​களில் ஏடிஏஎஸ் வசதி உள்​ளது.

ஏஇபிஎஸ் அமைப்​பு, ஒரு வாக​னம் அல்​லது தடை​யுடன் ஏற்​பட​விருக்​கும் மோதலைக் கண்​டறிந்​து, ஓட்​டுநர் சரி​யான முறை​யில் செயல்​படத் தவறி​னால் தானாகவே பிரேக்​கு​களைப் பயன்​படுத்​து​வதன் மூலம், விபத்​தைத் தடுக்​கிறது. 2027 ஜனவரி முதல், புதிய லாரி மற்​றும் பேருந்து மாடல்​களில்​ ஏஇபிஎஸ்​ அமைப்​பு இடம்பெறும்​ என கூறப்​படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here