கொலுசு வாங்கும் பணத்தை வயநாடு நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவி

0
366

தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் தூய மரியன்னை பசிலிக்கா நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்ட் மேரிஸ் இன்டர்நேஷனல் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிகளின் மாணவ மாணவியர் சார்பில் வயநாடு நிவாரண நிதியாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி சேரிக்கப்பட்டு கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் அருட்பணியாளர் கில்பர்ட் லிங்சன் வேண்டுகோளின் படி பள்ளி மாணவர்கள் பலரும் தன்னார்வத்துடன் இந்த நிதியை வழங்கினார்கள்.

இதில் குறிப்பாக ஒரு மாணவி தனக்கு தங்க கொலுசு வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை நிவாரண உதவியாக வழங்கினார். பள்ளி மாணவர்களின் சிறப்பு செயல்பாட்டை பள்ளி குழு உறுப்பினர்கள் பாராட்டினார்கள். இந்த நிதியை  பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கேரளா முதல்வரிடம் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here