புதுச்சேரி: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி முதல்வரிடம் பேரவை தலைவர் மனு

0
18

புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி முதல்வர் ரங்கசாமியிடம் தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் மனு அளித்துள்ளார்.

அதில், புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் மாதத்திலிருந்து கடந்த நான்கு மாதங்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன் மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வின் காரணமாக ஏழை, எளிய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1,100-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை அரிசியின் விலை இன்று மூட்டைக்கு ரூ.700 உயர்ந்து ரூ.1,800-க்கு விற்கப்படுகிறது.

அதாவது ரூ.60-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி அரிசி இன்று ரூ.20 உயர்ந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. ரூ.900-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை இட்லி அரிசி இன்று ரூ.300 உயர்ந்து ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. அதாவது ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.15 உயர்ந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது. ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு இன்று ரூ.40 உயர்ந்து ரூ.160-க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.130-ல் இருந்து ரூ.180-க்கும் விற்கப்படுகிறது. ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உளுத்தம் பருப்பு இன்று ரூ.30 உயர்ந்து ரூ.150-க்கு விற்கப்படுகிறது. ரூ.180-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூண்டு இன்று 54.62% உயர்ந்து ரூ.340-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், காய்கறி விலையும் இரட்டிப்பு மடங்காக உயர்ந்துள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு, இஞ்சி, எலுமிச்சை பழங்கள் உள்ளிட்டவை 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளன. இதனால் புதுச்சேரியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் இந்த விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வர், விலைவாசியைக் கட்டுப்படுத்த துறை ரீதியான உயர் அதிகாரிகள் மற்றும் 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here