குஜராத்: பாஜக எம்எல்ஏ பங்களாவை சுத்தம் செய்த தீயணைப்பு வாகனம்

0
12

குஜராத்தில் தீயணைப்பு வாகனத்தைப் பயன்படுத்தி பாஜக எம்எல்ஏ-வின் பங்களாவை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி உள்ளது. குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டம் தேவ்கத்பரியா சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த பச்சுபாய் மகன்பாய் கபாத்.

பிபெரோ கிராமத்தில் உள்ள அவருடைய பங்களாவை சுத்தம் செய்ய தீயணைப்பு வாகனம் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், எம்எல்ஏ பங்களாவைச் சுற்றி தேவ்கத்பரியா நகராட்சிக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறது. இதையடுத்து, தீயணைப்பு வாகனம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here